விளையாட்டு

பலநாள் ரகசியத்தை போட்டு உடைத்த தல தோணி! எனக்கும் கோவம் வரும்!

Summary:

Dhoni talks about his angry time and handling method

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான தல தோணி விளையாட்டு போட்டிகளின் போது உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் இருப்பது குறித்தும், தனக்கு கோவம் வருமா? வராதா என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், நானும் மற்றவர்கள் போலத்தான். எனக்கும் கோவம் வரும். வீரர்கள் தவறு செய்யும்போது ஏமாற்றம் அடைவேன், கோவப்படுவேன். ஆனால் இந்த கோவம் ஆக பூர்வமானது அல்ல, அந்த நேரத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்பது மட்டுமே என் மனதில் தோன்றும் என்று கூறியுள்ளார்.

மேலும், அதுபோன்ற சமயங்களில் அடுத்தது எந்த வீரரை பயன்படுத்தலாம் என யோசிப்பேன், அந்த வீரர் சரியாக விளையாடும் பட்சத்தில் என் உணர்ச்சிகளை சிறந்த முறையில் கையாள்கிறேன் என தோணி கூறியுள்ளார்.

இந்திய ரசிகர்கள், வீரர்கள் மட்டும் இன்றி, உலகில் உள்ள பல வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தல தோனியை  MR.கூல் கேப்டன் என அன்போடு அழைத்துவருகின்றனர். இவருக்கு கோவம் வருமா? வராதா? என கேட்பவர்களுக்கு தனது ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் தல தோணி.


Advertisement