விளையாட்டு

கடைசி ஓவரை ஜடேஜாவிடம் கொடுக்க காரணம் என்ன? தோனி விளக்கம்!

Summary:

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பிரோவோவிற்கு பதிலாக ஜடேஜாவை பந்துவீச வைத்ததற்கான காரணம் என்ன என தோனி விளக்கமளித்துள்ளார்.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் சரிந்தன.

தவான் மட்டும் ஒரு முனையில் அதிரடியாக விளையாடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிபெற 17 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை டெத் ஓவர் ஸ்பெஸலிஸ்ட் பிராவோ தான் வீசுவார் என எதிர்பார்த்த நிலையில் ஜடேஜாவை பந்து வீச வைத்தார் தோனி. அந்த ஓவரில் அக்ஷர் படேல் 3 சிக்சர்களை விளாசி டெல்லி அணியை வெற்றி பெற செய்தார்.

பிரோவோவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அதற்கு முன்னதாகவே வெளியில் சென்றுவிட்டார். இதனால் கடைசி ஓவரை வீச கரண் சர்மா அல்லது ஜடேஜா தான் சரி என தோன்றியது.  அதனடிப்படையிலேயே ஜடேஜாவை பந்துவீச வைத்ததாக தோனி தெரிவித்துள்ளார்.


Advertisement