விளையாட்டு

தோனிக்கு திடீர் காயம்; நாளைய போட்டியில் கலந்துகொள்வாரா!

Summary:

Dhoni got injured

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை ஹைதராபாத்தில் துவங்குகிறது. 

முதல் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில் இந்திய வீரர்கள் இன்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அணியின் சப்போர்ட் ஸ்டாஃப் ராகவேந்த்ரா வீசிய பந்து டோனியின் வலது கையில் (Forearm) தாக்கியது. இதனால் வலி தாங்காமல் அத்துடன் பயிற்சியை முடித்துக் கொண்டார் தோனி. 

காயத்தின் தீவிரம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து இதுவரை அணியின் சார்பில் எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நாளைய போட்டியில் தோனி கலந்துகொள்வாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஒருவேளை தோனி ஆடாத பட்சத்தில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களமிறங்க வாய்ப்புள்ளது. 


Advertisement