தோனியின் பெயரில் இப்படி ஒரு சாதனையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தோனியின் பெயரில் இப்படி ஒரு சாதனையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!



dhoni-files-a-worst-record-in-1st-t20

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் தோனி. இவர் இந்திய அணிக்காக அனைத்து வகையான கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். சர்வதேச ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என சர்வதேச தொடர்களை இந்திய அணிக்காக வென்று கொடுத்தவர்.

மேலும் ரன் குவிப்பிலும், விக்கெட் கீப்பிங்கிலும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் தோனி. இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான தோனிக்கு ஒரு மோசமான சாதனையும் இருந்து வருவது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்துகிறது.

அந்த மோசமான சாதனை என்னவெனில் இந்தியா ஆடியுள்ள சர்வதேச டி20 போட்டிகளில் எப்பொழுதெல்லாம் தோனி அதிகபட்ச ரன் எடுக்கும் வீரராக இருக்கிறாரோ அந்த போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்துள்ளது. இந்த வேதனையான சாதனையானது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியிலும் அரங்கேறியது.

cricket

இந்த போட்டியில் 220 ரன் என்ற கடின இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் தோனி மட்டும் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மீண்டும் தோனி அதிகபட்சமாக ரன் எடுத்த சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதுவரை இந்த மோசமான சாதனை அரங்கேறிய ஆட்டங்களின் விவரம்:
48* v Aus, Sydney, 2012 (Lost by 31 runs)
38 v Eng, Mumbai WS, 2012 (Lost by six wickets)
30 v NZ, Nagpur, 2016 (Lost by 47 runs)
36*v Eng, Kanpur, 2017 (Lost by seven wickets)
39 v NZ, W'ton, 2019 (Lost by 80 runs)