சுற்றிலும் பெண்கள் கூட்டம்.. பெண்களுக்கு மத்தியில் தோனி.. மனைவியுடன் டான்ஸ்.. வைரல் வீடியோ..

மனைவியுடன் கூலாக நடனமாடும் தோனியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.


Dhoni dance with wife viral video

மனைவியுடன் கூலாக நடனமாடும் தோனியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு ஐபில், கிரிக்கெட் பயிற்சி என பிசியாக இருக்கும் தல தோனி தனது மனைவியுடன் கூலாக நடனமாடியுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. இதுகுறித்து வெளியான முதல் வீடியோ பதிவில், தோனி தனது மனைவியுடன் மம்மி நு பசந்த் என்ற இந்தி பாடலுக்கு நடனமாடுகிறார்.

dhoni

இரண்டாவது வீடியோவில், தோனியை சூழ்ந்த பெண்கள் சிலர் தோனியுடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோவில் கோட் அணிந்திருந்த தோனி, பல பெண்களுக்கு மத்தியில் அமைதியாக போஸ் கொடுக்கிறார். அவருக்கு பின்னால் அவரது மனைவி இருக்கிறார்.

இந்த காட்சி அனைத்தும் தோனி நபர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.