இதுதாங்க மகிழ்ச்சி... போட்டிக்கு கிளம்பும் முன் தனது இரட்டை குழந்தைகளுடன் தினேஷ் கார்த்திக் போட்ட பதிவு.!

இதுதாங்க மகிழ்ச்சி... போட்டிக்கு கிளம்பும் முன் தனது இரட்டை குழந்தைகளுடன் தினேஷ் கார்த்திக் போட்ட பதிவு.!


dhinesh-karthik-shared-his-kids-photo

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக், தற்போது, டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக விளங்கி வருகிறார். தற்போது தினேஷ் கார்த்திக், டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்பதாக தமிழகம் வந்தார்.

டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணிக்காக சுமார் ஒரு வாரம் இருக்கும் கார்த்திக், மீண்டும் 29ஆம் தேதி தொடங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க செல்கிறார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தினேஷ் கார்த்திக் தயாராகி வருகிறார்.


தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் தம்பதிக்கு கடந்தாண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கிளம்பும் முன்னர் தனது குழந்தைகளை கையில் ஏந்தியபடி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், குடும்பத்துடன் வீட்டில் இருக்கும் இந்த சிறிது நேரத்தையே மகிழ்ச்சி என்று அழைக்கிறோம். இப்போது வேலைக்குத் திரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.