இங்கிலாந்து வீராங்கனையை ஏன் 'மன்கட்' முறையில் ரன்-அவுட் செய்தேன் தெரியுமா.? தீப்தி ஷர்மா விளக்கம்

இங்கிலாந்து வீராங்கனையை ஏன் 'மன்கட்' முறையில் ரன்-அவுட் செய்தேன் தெரியுமா.? தீப்தி ஷர்மா விளக்கம்


dheepthi-sharma-talk-about-mancut

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பரபரப்பாக நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இந்திய அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதனையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்திய வீராங்கனைகள் கடுமையாக சவால் அளித்தனர். ரேணுகா சிங் மற்றும் ஜுலன் கோஸ்வாமியின் அபார பந்துவீச்சால் 118 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது.

இறுதியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 39 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது பந்துவீசிய தீப்தி ஷர்மா, மறுமுனையில் இருந்த சார்லெட் டீனை  'மன்கட்' முறையில் ரன் அவுட் செய்து விக்கெட் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

deepthi sharma

இந்தநிலையில், சர்ச்சைக்குரிய 'மன்கட்' முறையில் தீப்தி ஷர்மா ரன்-அவுட் செய்தது விமர்சனத்துக்கு உள்ளானது. இங்கிலாந்து வீரர்கள் பலர் இந்த ரன்-அவுட் விளையாட்டு உத்வேகத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று கொல்கத்தா திரும்பிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பந்து வீசும் முன்பு கிரீசை விட்டு முன்னோக்கி செல்ல வேண்டாம் என்று சார்லி டீனை பலமுறை எச்சரிக்கை செய்தோம். அத்துடன் நடுவரிடமும் புகார் தெரிவித்தோம். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் கிரீசை விட்டு வெளியே சென்றபடி இருந்தார். இதனால் தான் அவரை ரன்-அவுட் செய்தேன். கிரிக்கெட் விதிமுறையின்படி தான் நாங்கள் செயல்பட்டோம் என தெரிவித்துள்ளார்.