கோலியிடம் சிறந்த வீரருக்கான 4 தகுதிகளும் உள்ளது; ஆஸ்.அணியின் முன்னாள் ஜாம்பவான் புகழாரம்.!

கோலியிடம் சிறந்த வீரருக்கான 4 தகுதிகளும் உள்ளது; ஆஸ்.அணியின் முன்னாள் ஜாம்பவான் புகழாரம்.!


denish-lilli---australia---viraht-kohli---india

வீராட் கோலியிடம் சிறந்த பேட்ஸ்மேனுக்கான நான்கு தகுதிகளும் உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டெனிஸ் லில்லி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3T-20 ,4டெஸ்ட், மற்றும் 3ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்தது இந்திய அணி. இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஆனாலும் இப்போட்டியில் கேப்டன் விராட் கோலி அடித்த (123 ) சதம் பெரிதாக பேசப்பட்டது.

cricket

இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் டெனிஸ் லில்லி ஆனந்த்பஜார் பத்திரிகாவுக்கு அவர் அளித்த பேட்டியில், “விராட் கோலி ஒரு கிரேட் பிளேயர், இதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, ஏற்கெனவே அது நிறுவப்பட்ட ஒன்று. அவரை கிரேட் ஆக ஆக்குவது அவரது உத்தி, உறுதிப்பாடு, பேலன்ஸ், பந்தை அவர் விரைவில் பார்த்து விடுவது, இந்த நான்கும் கூடிவரப்பெற்ற வீரர்களில் விராட் கோலியும் ஒருவர்.

அவர் பந்தை கொஞ்சம் விரைவாகக் கணிக்கிறார். அனைத்து கிரேட் பேட்ஸ்மென்களும், உத்தி, உறுதிப்பாடு, பேலன்ஸ், பந்தை விரைவில் கணிப்பது என்ற 4 முக்கிய அம்சங்களைக் கொண்டிருப்பார்கள். விராட் கோலி நான் பார்த்த பெரிய பேட்ஸ்மென்களுக்குச் சமமானவரே” என்று டெனிஸ் லில்லி ஒர் அரிய புகழாரம் சூட்டியுள்ளார்.