டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி.! சுருண்டு விழுந்த விராட் கோலி படை.!

டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி.! சுருண்டு விழுந்த விராட் கோலி படை.!


delhi-capitals-won-bengalore-team

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் இன்று மோதியது. துபாயில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

இதனையடுத்து டெல்லி அணியில் துவக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடியது. சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா 23 பந்துகளுக்கு 42  ரன்களும், ஷிகார் தவான் 28 பந்துகளுக்கு 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

virat

இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 11 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து அதிரடியாக ஆடிய ஸ்டோய்னிஸ் 26 பந்துகளுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தார். ரிஷாப் பாண்ட் 25 பந்துகளுக்கு 37 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  20 ஒவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும், உதனா, மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

virat

இதனையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. படிக்கல் 4 ரன்கள் எடுத்த நிலையிலும், பின்ச் 13 ரன்கள் எடுத்தநிலையிலும் அவுட் ஆகி வெளியேறினர். பெங்களூரு அணியின் கேப்டன் விராட் மட்டும் அந்த அணியில் அதிகபட்சமாக 39 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். 

இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 137 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.  டெல்லி கேப்பிடல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.