நாடாளும் தலைவர்களால் பெரிதும் பேசப்படக்கூடிய வீரர் தோனி.. ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் புகழாரம்!

நாடாளும் தலைவர்களால் பெரிதும் பேசப்படக்கூடிய வீரர் தோனி.. ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் புகழாரம்!


Dean jones talks about dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிரதமர் மற்றும் அதிபர்களால் பெரிதும் பேசப்படக்கூடிய வீரர் என ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் தோனி விளையாடியுள்ள பல்வேறு போட்டிகளுக்கு வர்ணனை செய்துள்ளார். இதனால் தோனியின் அனுகுமுறைகள் ஆடும் விதங்களை தான் கூர்ந்து கவனித்துள்ளதாக கூறியுள்ளார்.

Dean jones

மேலும் தோனி குறித்து பேசியுள்ள அவர், தோனி ஆடும் ஒவ்வொரு ஆட்டமும் விறுவிறுப்பாக இருக்கும். தோனி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கும். அந்த அளவிற்கு திறமை வாய்ந்தவர் அவர்.

பல நாடுகளின் பிரதமர் மற்றும் அதிபர்கள் தோனியின் திறமை பற்றி பேசியுள்ளனர் என கூறிய அவர் பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாராப் ஒருமுறை தோனியின் தலைமுடி பற்றி பேசியதை நினைவு கூர்ந்தார். அந்த போட்டியின் போதும் ஜோன்ஸ் வர்ணணையாளராக இருந்துள்ளார். வரும் ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.