தமிழக வீரர் முரளி விஜய்யின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? மிரட்டலாக விளையாடிவரும் முரளி விஜய்.

தமிழக வீரர் முரளி விஜய்யின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? மிரட்டலாக விளையாடிவரும் முரளி விஜய்.


Current status of murali vijay

இந்திய அணியில் மிக சிறப்பாக விளையாடிவந்த தமிழக வீரர்களில் ஒருவர் முரளி விஜய். ஒருசில போட்டிகளில் இவர் சாதித்தாலும், பெருமபாலான போட்டிகளில் சொதப்பவே செய்தார். அதன்பின்னர் இந்திய அணியில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வாகி சிறப்பாக விளையாடிவந்தார்.

ஐபில் போட்டிகளிலும் தன்னை நிரூபிக்க தவறிய முரளி விஜய் சென்னை அணிக்காக தேர்வாகியும் விளையாட வாய்ப்பு இல்லாமல் தவித்துவந்தார். இந்நிலையில் இந்திய அளவில் நடைபெறும் விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணிக்காக முரளி விஜய் விளையாடிவருகிறார்.

murali vijay

நேற்று நடந்த போட்டியில் தமிழக அணி குஜராத் அணியை வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த தமிழக அணி 9 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்கள் பெற்றது. இதில் சிறப்பாக விளையாடி முரளி விஜய் 94 ஓட்டங்கள் பெற்றார். இதனை அடுத்து விளையாடிய குஜராத் அணி 42.2 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ஓட்டம் மட்டுமே எடுத்தது.

இதுவரை நடந்துள்ள 9 போட்டிகளில் தமிழக அணி அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அணைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தமிழக அணியின் வெற்றிக்கு காரணமாக உள்ளார் முரளி விஜய்.