ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்...! சீறி எழும் சென்னை அணி.!

ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்...! சீறி எழும் சென்னை அணி.!


csk won yesterday mnatch

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், சன்ரைசர்ஸ் அணியும் நேற்று மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

சென்னை அணியின் துவக்க  வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். துவக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி. சன்ரைசர்ஸ் அணி வீசிய பந்துகளை நாலாபுறமும் பவுண்டரி சிக்சருக்கு விரட்டினர். சென்னை அணியின் ஸ்கோர் 182 என இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. ருதுராஜ் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கான்வே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 85 ரன்களை  விளாசினார்.  

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.