விராட் கோலி படையை ஓட.. ஓட விரட்டிய சிஎஸ்கே ஸ்பார்க்..!

விராட் கோலி படையை ஓட.. ஓட விரட்டிய சிஎஸ்கே ஸ்பார்க்..!



csk won the RCB

ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டியின் 44வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இன்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதனையடுத்து பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய படிக்கல் மற்றும் பின்ச் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினர். சிறப்பாக ஆடிய பின்ச் 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். படிக்கல் 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். 

cskபின்னர் களமிறங்கிய ஏபிடி, விராட் கோலியுடன் அருமையான ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஏபிடி ஏபிடி 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். விராட் 43 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தனர். 

இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்களான கெய்க்வாட் மற்றும் டுபிளசிஸ் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடினர். டுபிளசிஸ் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய அம்பத்தி ராயுடுவும் அதிரடியை கிளப்பினார். அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தநிலையில் சஹல் ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய தல தோனியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

csk

துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடிய கெய்க்வாட் 51 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து பெங்களூரு அணியை ஓடவிட்டார். சென்னை அணி 18.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.