சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளதா?. கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுவது என்ன.?

சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளதா?. கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுவது என்ன.?



csk-will-go-to-next-round


ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 40 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணைத்து அணிகளும் இனி நடக்கும் ஆட்டங்களில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளன. 

தற்போது முதல் நான்கு இடத்தில் புள்ளி பட்டியலில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7 ஆட்டங்களில் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதல் இடத்திலும், அதேபோல் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7 ஆட்டங்களில் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 6 ஆட்டங்களில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5 ஆட்டங்களில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் கொல்கத்தா அணி உள்ளது. 

csk

அதிக ரசிகர்களை கொண்ட தோனி தலைமையிலான சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 7 தோல்விகள் கண்டு 6 புள்ளிகளுடன் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள  4 போட்டிகளில் வென்றாலும், பிற அணிகளின் வெற்றி மற்றும் தோல்விகளை அடிப்படையாக வைத்தே சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்பட இருக்கிறது. 

தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் உள்ள பிற அணிகள் அசுர பலத்துடன் வலுவான நிலையில் உள்ளதால், சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கிரிக்கெட் வல்லுநர்களால் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். இதைக் கூறுவதற்கே கடினமாக உள்ளது என  நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டைரிஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.