இந்தியா விளையாட்டு

யார் முதலிடம்.? கோலி படையா.., தோனி படையா.? முதன்முறையாக அனல்பறக்கும் இன்றைய ஆட்டம்.!

Summary:

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று (ஞாயிற்றுக்கி

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் 19-லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெறுகிறது.

இரண்டாவது போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இரவு 730 மணிக்கு மோதுகிறது. ஆனால் தற்போது புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆர்.சி.பி அணிக்கும், இரண்டாவது இடத்தில் இருக்கும் சி.எஸ்.கே அணிக்கும் இடையே நடக்கும் போட்டிதான் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாய் அமைந்துள்ளது.

இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதும் இந்த ஆட்டத்தில் யார் வெற்றி என்பதே இதில் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாகும். இவ்விரு அணிகளும் இதுவரை 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 9-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை சி.எஸ்.கே  வீழ்த்தினால் புள்ளிபட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளும். இந்த சுவாரஸ்ய ஆட்டத்திற்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement