இந்தியா விளையாட்டு

தீ பறக்க முட்டி பாரு.. சிஎஸ்கே-வ தொட்டு பாரு..! செத்து பொழச்சு வந்தா.. அவன் சென்னை காரன்..! பரபரப்பான இன்றைய ஆட்டம்.!

Summary:

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. டெல்லிக்கு எதிரான தனது முதல் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

அந்த ஆட்டத்தில் சென்னை அணி 189 ரன்கள் அடித்திருந்த போதும், டெல்லி அணியின் துவக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா இருவரும் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு கொன்று சென்றனர். அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் மோசமான பந்துவீச்சு தோல்விக்கு காரணமாக இருந்தது. இதனால் சென்னை அணிக்கு மோசமான விமர்சனங்கள் எழுந்தது.

இந்தநிலையில்  பஞ்சாப்புக்கு எதிராக இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நெஞ்சை நிமிர்த்தி களமிறங்கவுள்ளது சென்னை அணி. கடந்த சீசனில் இரண்டு லீக்கிலும் பஞ்சாப்பை சென்னை அணி துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த போட்டிக்காக சென்னை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement