சென்னை அணி மும்பை அணியுடன் எத்தனை போட்டிகளில் தோற்றுள்ளது தெரியுமா? இதோ!

csk vs mi won lost more matches in ipl


csk-vs-mi-won-lost-more-matches-in-ipl

ஐபில் சீசன் 12 இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்நிலையில் இரண்டாவது சுற்றின் முதல் ஆட்டம் இன்று சென்னையில் இரவு 7 . 30 மணிக்கு தொடங்குகிறது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்றய ஆட்டத்தில் மோதுகிறது.

இந்த சீசனில் சென்னை, மும்பை அணிகள் இடையே நடந்த இரண்டு போட்டியிலும் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற்றால் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் தோல்வியடைந்தால் டெல்லி அல்லது கைதராபாத் அணியுடன் மேலும் ஒரு போட்டியில் விளையாடும்.

IPL 2019

இந்நிலையில் சென்னை, மும்பை அணிகள் இடையே நடந்துள்ள 26 போட்டிகளில் சென்னை அணி 11 போட்டிகளிலும் மும்பை அணி 15 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. மும்பை அணி 11 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. ஆனால் சென்னை அணி 15 போட்டிகளில் இதுவரை தோல்வியை தழுவியுள்ளது.

குறிப்பாக கடந்த சீசனிலும், தற்போதைய சீசனிலும் சென்னை அணி தொடர்ந்து மும்பை அணியுடன் தோல்வியை சந்தித்து வருகிறது. இன்றைய ஆட்டமானது சென்னையின் சொந்த மண்ணில் நடைபெறுவதால் சென்னை அணி வெற்றிபெற சற்று அதிக வாய்ப்புள்ளது.

IPL 2019