விளையாட்டு

கொல்கத்தா அணிக்கு வாழ்வா? சாவா? சென்னை அணி பழிதீர்க்குமா? பரபரப்பான இன்றைய போட்டி.!

Summary:

இன்றைய ஆட்டம் கொல்கத்தா அணிக்கு வாழ்வா? சாவா?போராட்டமாக இருக்கும்.

ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று நடக்கும் 49வது லீக் ஆட்டத்தில் தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகிறது. 

ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில், இன்றைய போட்டி சென்னை அணிக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத போட்டியாக இருந்தாலும், வெற்றி பெறுவதற்கு ஓரளவிற்காவது பாடுபட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏற்கனவே கொல்கத்தாவிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பழிதீர்த்து அவர்களின் அடுத்து சுற்று கனவை சிதைக்க தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் 6 போட்டிகளில் வெற்றி, 6 போட்டிகளில் தோல்வியுடன் உள்ள கொல்கத்தா அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று முன்னேற வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில் இன்றைய ஆட்டம் கொல்கத்தா அணிக்கு வாழ்வா? சாவா?போராட்டமாக இருக்கும்.  


Advertisement