விளையாட்டு

சென்னை அணிக்கு இதுதான் கதி!! ரசிகர்களை கடுப்பாக்கிய முன்னாள் வீரர்.. சிஎஸ்கே கொடுத்த தரமான பதிலடி!!

Summary:

வரும் ஐபில் போட்டியில் சென்னை அணியின் புள்ளி பட்டியல் குறித்து முன்னாள் வீரர் ஒருவர் போட்ட

வரும் ஐபில் போட்டியில் சென்னை அணியின் புள்ளி பட்டியல் குறித்து முன்னாள் வீரர் ஒருவர் போட்ட ட்விட் சென்னை அணி ரசிகர்களிடையே கடும் வைரலானது.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரண்டாவது நாள் ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியுடன் மோதுகிறது.

கடந்த ஐபில் சீசனில் மோசமாக விளையாடிய சென்னை அணி, இந்த முறை ஐபில் கோப்பையை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்நிலையில் சென்னை அணி ரசிகர்களின் நம்பிக்கையை கெடுக்கும் விதமாகவும், அவர்களை கடுப்பேத்தும் விதமாகவும் முன்னாள் சிஎஸ்கே வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் டிவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அதில், வரவிருக்கும் ஐபில் போட்டியில் 8 அணிகள் புள்ளிப் பட்டியலில் எந்த இடத்தை பிடிக்கும் என தனது கருத்தை அவர் தெரிவித்திருந்தார். அதில், மும்பை அணி முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் இருக்கும் என குறிப்பிட்ட அவர், சென்னை அணிதான் புள்ளி பட்டியலில் கடைசி இடமான 8 வது இடத்தில் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது மட்டுமில்லாமல் சென்னை அணி ரசிகர்களின் விமர்சனத்துக்கும் உள்ளானது. இந்நிலையில் சென்னை அணி ஸ்காட் ஸ்டைரிஸ் போட்ட டிவிட்டுக்கு பதில் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளது. அதில், "எக்ஸ் மச்சி, ஒய் மச்சி? எல்லோ மச்சி (Ex Machi. Why Machi? #Yellove  Machi )" என கூறியிருந்தது.

இந்த பதிவை பார்த்த ஸ்காட் ஸ்டைரிஸ், தனது ட்வீட்டிற்கு மன்னிப்பு கேட்கும் வகையில் பதில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement