சினிமா விளையாட்டு

எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மைதானத்தில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிவரும் சிஎஸ்கே அணியினர்!

Summary:

Csk players wearing black badge for spb death

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ மற்றும்  வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென நேற்று எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது.

இந்தநிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரைப்பிரபலங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் நேற்று மாரடைப்பால் காலமானார். இந்தநிலையில் எஸ்பிபி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் இருவரின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

 இன்று நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  இதனையடுத்து டெல்லி கேப்பிடல் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்தநிலையில் பில்டிங் செய்து வரும் சிஎஸ்கே அணியினர் பாடகர் எஸ் பி பி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

டெல்லி அணியினரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். எஸ்பிபி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் இருவரின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள் என சென்னை அணியின் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement