கடைசி இடத்தில் இருந்து ஜெட் வேகத்தில் முன்னேறிய சிஎஸ்கே.! புள்ளி பட்டியல் முழு விவரம்.!

கடைசி இடத்தில் இருந்து ஜெட் வேகத்தில் முன்னேறிய சிஎஸ்கே.! புள்ளி பட்டியல் முழு விவரம்.!


csk-improved-second-place-in-rank-list

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வெற்றி பெற்றது. நேற்றய ஆட்டத்தின் வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.

iplபெங்களூர் அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி  2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், டெல்லி அணி  2 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகள் தலா  2 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.