இந்த விருந்து போதும் தல... இந்த வருடம் முழுவதும் நிம்மதியாக இருப்போம்.! கொண்டாடும் சென்னை ரசிகர்கள்.!

இந்த விருந்து போதும் தல... இந்த வருடம் முழுவதும் நிம்மதியாக இருப்போம்.! கொண்டாடும் சென்னை ரசிகர்கள்.!


csk-fans-happy-for-yesterday-match

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற  போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதின. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி அணி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். தொடர்ந்து ஓவரின் 5-வது பந்தில் இஷான் கிஷன் போல்டானார். இதனால் முதல் ஓவரிலே மும்பை அணியின் துவக்க வீரர்கள் இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

சென்னை அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் டக் அவுட்டாகி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சான்ட்னர் 11 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய உத்தப்பா 30 ரன்களில்வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ராயுடு 40 ரன்களில் வெளியேறினார். இறுதியில் மும்பை அணிக்கு சாதகமாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்படது.

கடைசி ஓவரின் முதல் பந்தில் பிரிட்டோரியஸ் உனட்கட் பந்துவீச்சில் எல்பிடபில்யூ ஆனார். இரண்டாவது பந்தில் பிராவோ ஒரு ரன் எடுக்க 3-வது பந்தை எதிர்கொண்ட தோனி சிக்சர் அடித்தார். 4-வது பந்தில் பவுண்டரியை விரட்டினார். 5-வது பந்தில் தோனி 2 ரன்கள் எடுக்க இறுதி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் பவுண்டரி விரட்டிய தோனி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. சென்னை அணி கோப்பையை கைப்பற்றாவிட்டாலும் பரவாயில்லை இந்த ஒரு ஆட்டமே இந்த சீசனுக்கு போதும் என சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.