முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணி! ஆனாலும் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்!!

முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணி! ஆனாலும் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்!!


csk fans feeling sad


ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, இந்த முறையும் சிறப்பாக விளையாடி இதுவரை 6 போட்டிகள் நடைபெற்றதில் 5 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இதுவரை சென்னையில் நடைபெற்ற ஆட்டங்களில் அனைத்தும் சென்னை அணி சொதப்பியபடியே வெற்றிபெற்றுள்ளது. முதல் ஆட்டம் சென்னையில் நடைபெற்ற நிலையில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அனால் முதல் ஆட்டமும் சென்னை ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது.

csk

சென்னை மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தினை பார்ப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னரே தவமாய் தவமிருந்து காத்திருந்தனர் சென்னை ரசிகர்கள். ஆனால் இதுவரை சென்னையில் நடைபெற்ற போட்டிகள் ரசிகர்களிடையே, எதற்காக மைதானத்திற்கு சென்றோம் என்ற மனநிலையை உருவாக்கியது.

ஐபிஎல் போட்டியில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ள அணி என்றால் அது சென்னை அணி தான். சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தாலும் அதிரடியாக ஆடாமல் இன்றுவரை ரசிகர்களை ஏமாற்றிவருவதாக சென்னை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.