விளையாட்டு

தோனி இன்னும் எத்தனை ஐபிஎல் தொடர்களில் விளையாடுவார்? சிஎஸ்கே CEO பதில்

Summary:

Csk ceo talks about dhoni's future

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் மகேந்திர சிங் தோனி 2021 மற்றும் 2022 ஐபிஎல் தொடர்களிலும் விளையாடுவார் என எதிர்பார்ப்பதாக சிஎஸ்கே சிஈஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு எந்த சர்வதேச போட்டிகளிலும் கலந்துகொள்ளாத தோனி ஐபிஎல் 2020ல் மீண்டும் களம் இறங்கவுள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதத்தில் சென்னை வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார் தோனி.

தற்போது மீண்டும் ஆகஸ்ட் 16 முதல் 20 வரை சென்னையில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார். அதன் பிறகு சென்னை அணி ஆகஸ்ட் 21 ஆம் தேதி யூஏஇக்கு புறப்படவுள்ளது.

இந்நிலையில் தோனி குறித்து பேசிய சிஎஸ்கேயின் சிஈஓ விஸ்வநாதன், "தோனி அடுத்து 2021 மற்றும் 2022 ஐபிஎல் தொடர்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்" என கூறியுள்ளார்.


Advertisement