CSK ரசிகர்களுக்கு சோக செய்தி.. ரெய்னாவின் தீவிர ரசிகர் மரணம்..!

CSK ரசிகர்களுக்கு சோக செய்தி.. ரெய்னாவின் தீவிர ரசிகர் மரணம்..!



CSK and Raina fan Vignesh passed away

ஐபிஎல் தொடர்‌ துவங்கிய‌ காலத்திலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கென்றே‌ ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக தோனி மற்றும்‌ ரெய்னாவின் பெயர்களை உடலில் எழுதி ஆராவாரம் செய்யும் காட்சி சிஎஸ்கே ரசிகர்களின் உணர்வை தூண்டும்.

அப்படி ரெய்னாவின் பெயரினை‌ உடலில் எழுதிக்கொண்டு அவரின் தீவிர ரசிகர் என பெயர் பெற்றவர் விக்னேஷ். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

CSK fan dead

தற்போது விசில் போடு‌ ஆர்மி எனும் சிஎஸ்கே ரசிகர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மைதானத்தில் விக்னேஷை அதிகமாக மிஸ் செய்ய போவதாகவும் சோகமாக குறிப்பிட்டுள்ளனர்.