தெருவில் பானிபூரி வியாபாரம் செய்து, உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்!

தெருவில் பானிபூரி வியாபாரம் செய்து, உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்!


cricket-player-yashasvi-jaiswal-selected-in-under-19-wo


உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 17வயது கிரிக்கெட் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (UNDER 19) உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஏழை குடும்பத்தில் பிறந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தில் தனது 11 வயதில் இருந்தே மும்பையில் தெருக்களில் பாணிப்பூரி விற்று அதில் வரும் வருமானத்தை கொண்டு கிரிக்கெட் பயிற்சி பெற்றுள்ளார்.

under 19

உள்ளூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் சிறப்பாக விளையாடியதால் உலககோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த உலக்கோப்பை தொடர் வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென் ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ளது.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே டிராஃபியில் அதிக ரன் குவித்தது இவர் தான். மேலும், பட்டியல் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கவுசல் மற்றும் சஞ்சு சாம்சன் பட்டியலில் விஜய் ஹசாரேவும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.