விளையாட்டு

கிரிக்கெட் மிகவும் ஆபத்தான விளையாட்டு என்பதற்கான ஆதாரம் இதோ (வீடியோ)!

Summary:

Cricket is one of the dangerous game video goes viral

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் மிகவும் ஆபத்து குறைவான ஒரு விளையாட்டு, கிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு என்றுகூட பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கிரிக்கெட் விளையாட்டு எவ்வளவு ஆபத்தான விளையாட்டு என்பது இந்த வீடியோவை பார்க்கும்போது கட்டாயம் புரியும்.

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கும், சவுத் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில்  வெஸ்டர்ன்  அணி வீரர் ஆஷ்டன் அகர் தண்ணி நோக்கி வரும் பந்தை பிடிக்க முயன்ற போது, பந்தை தவறிவிடுகிறார், தவறிய பந்து அவரது கண்ணாடியை உடைத்து, இரண்டு கண்களுக்கும் இடைப்பட்ட பகுதியை பலமாக தாக்குகிறது.

இதில் ஆஷ்டன் அகர் நெற்றி உடைந்து இரத்தம் கொட்டுகிறது. இந்த சோகத்திலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் எதிர் அணியில் தனது சொந்த சகோதரர் அடித்த பந்தை பிடிக்க முயற்சித்தபோதுதான் ஆஷ்டன் அகர் காயமடைந்துள்ளார். தகுந்த சிகிச்சைக்கு பிறகு ஆஷ்டன் அகர் நலமாக உள்ளார்.

இதேபோல், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ், பவுன்சர் பந்தை எதிர்கொண்ட போது, பந்து தலையை தாக்கி அவர் உயிரிழந்த சம்பவம் நம்மால் மறக்க முடியாத ஓன்று.


Advertisement