யாரும் நெருங்க முடியாத புதிய உலக சாதனையை படைத்த கிறிஸ் கெய்ல்!

யாரும் நெருங்க முடியாத புதிய உலக சாதனையை படைத்த கிறிஸ் கெய்ல்!


chris-gayle-reaches-first-500-sixers-in-international-c

39 வயதான வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 500 சிக்சர்களை விளாசியுள்ளார். சர்வதேச அரங்கில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் வென்றதையடுத்து தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

cricket

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த தொடரின் நான்காவது போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பட்லர் மற்றும் மோர்கன் ஆகியோரின் அதிரடி சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 150 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தம் 24 சிக்ஸர்களை விளாசி ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.

cricket

இமாலய இலக்கை துரத்தி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை காண்பித்தார். 97 பந்துகளை சந்தித்த அவர் 14 சிக்சர்கள் விளாசி 162 ரன்கள் எடுத்தார். இருப்பினும் 48 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 375 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த போட்டியில் தனது எட்டாவது சிக்சரை விளாசிய போது கிறிஸ் கெய்ல் அரங்கில் 500வது சிக்சரை பதிவு செய்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். இவர் டெஸ்ட் போட்டிகளில் 98 சிக்சர்களும் ஒருநாள் போட்டியில் 305 சிக்சர்களும் டி20 போட்டியில் 103 சிக்சர்களும் விளாசியுள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களையும் கடந்துள்ளார் கிறிஸ் கெய்ல்.