சிதறிய ஸ்டம்ப்!! மிரண்டுபோய் நின்ற கெயில்!! மனுஷன் என்னா ஒரு பந்துவீச்சு!! வைரல் வீடியோ..Chris gayle boweld by rabada viral video

டெல்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வீரர் கெய்ல் போல்ட் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஐபில் 14 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பஞ்சாப் அணி வீரர்கள் பேட்டிங்கை தொடங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் 12 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த கிறிஸ் கெய்லும் 13 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

அதன்பிறகு வந்த வீரர்கள் சற்று நிதானமாக ஆடி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 17.4 ஓவர்களில் 167 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

ipl t20

இந்நிலையில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கெயில் போல்ட் ஆன வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. போட்டியின் 6 வது ஓவரை டெல்லி அணி வீரர் ரபடா வீசினார். அந்த ஓவரை கெயில் எதிர்கொண்டார்.

ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் கெயில். அடுத்த பந்தை ரபடா ஃபுல் டாசாக வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத கெயில், பந்தை தடுக்க முயன்றார். ஆனால் அதற்குள் பந்து ஸ்டெம்பில் பட்டு ஸ்டெம்புகள் பறக்க தொடங்கியது. இதனை பார்த்ததும் ஒருநிமிடம் கிறிஸ் கெய்லே மிரண்டு போய்விட்டார். தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.