விளையாட்டு

ஒரே பந்தில் ஆட்டத்தையே திசை திருப்பிய சென்னை அணி! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

Summary:

Chennai won the match against to rajasthan royals

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தீவிரமாக விளையாடி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான், சென்னை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ராஜஸ்தானின் சொந்த மண்ணில் நடைபெற்றது.

டாஸ் வென்று சென்னை அணி ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தது. முதலில் பேட் செய்த ராசஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் மட்டுமே எடுத்தது.

எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 6 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்த சென்னை அணி தோல்வியை நோக்கி சென்றது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ராய்டு மற்றும் கேப்டன் தோணி இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

18 வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் ராய்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் தோனி இருவரும் நிதானமாக ஆடினர். கடைசி ஓவரில் 18 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் ஜடேஜா. சென்னை அணி நிச்சயம் வெற்றிபெற்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய மூன்றாவது பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார் தல தோணி.

ஒருவழியாக கடைசி பந்தில் நான்கு எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய அகலப்பந்து சென்னை அணிக்கு சற்று ஆறுதலாக அமைந்தது. அதனை தொடர்ந்து 1 பந்தில் 3 என்ற நிலையில் இருக்கையின் நுனிக்கே வந்து விட்டனர் சென்னை ரசிகர்கள். ஒருவழியாக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சென்னை அணியை த்ரில் வெற்றிபெற வைத்தார் சாண்ட்னெர். இதன் மூலம் சென்னை அணி மேலும் ஒரு புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.


Advertisement