விளையாட்டு

இந்த சீசனில் சென்னை அணிக்கு இதுதான் முதல் முறை! இன்றைக்காவது வெற்றிபெறுமா? காத்திருக்கும் ரசிகர்கள்.

Summary:

சென்னை மற்றும் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சென்னை மற்றும் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய ஐபில் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. துபாய் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் ஹைத்ராபாத் அணிகள் மோதுகின்றன. 7 போட்டிகளில் மூன்று வெற்றி நான்கு தோல்வி என்ற நிலையில் ஹைதராபாத் அணியும், 7 போட்டிகளில் 2 வெற்றி 5 தோல்வி என்ற நிலையில் சென்னை அணியும் மோதுகின்றன.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் இரண்டு அணிகளும் களமிறங்கியுள்ளது. அதிலும் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்துவருவதால் இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இற்றைய போட்டியில் சென்னை அணி முதல் முறையாக முதல் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த சீசனில் கடந்த 7 போட்டிகளில் ஒருமுறை கூட முதல் பேட்டிங் செய்தா சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்கிறது. முதல் பேட்டிங்கில் சென்னை அணி சிறப்பாக விளையாடுமா? இன்று வெற்றிபெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement