சன்ரைசர்ஸ் அணியின் தாறுமாறு ஆட்டம்.! அசால்டாக ஊதித்தள்ளிய சென்னை.! தரமான சம்பவம்.!

சன்ரைசர்ஸ் அணியின் தாறுமாறு ஆட்டம்.! அசால்டாக ஊதித்தள்ளிய சென்னை.! தரமான சம்பவம்.!


chennai-super-kings-won-by-7-wkts

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரின் 23வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதியது. நெட்டார்யா ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

இதனையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களாமிறங்கினர். பேர்ஸ்டோவ் 7 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வார்னருடன், மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் 57 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக மணிஷ் பாண்டேவும் 61(46) ரன்களில் ஆட்டமிழந்தார். 

cskஇறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் 10 பந்துகளுக்கு 26 ரன்களும், கேதர் ஜாதவ் 4 பந்துகளுக்கு 12 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். 

துவக்க வீரர்கள் இருவரும் தங்களது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினர். சிறப்பாக ஆடிய கெய்க்வாட் 44 பந்துகளுக்கு 75 ரன்கள் எடுத்தநிலையில் ரஷித்கான் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து டூ பிளஸ்சி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 18.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.