விளையாட்டு

நம்பர் ஒன் பவுலர் பும்ராவுக்கு இப்படி ஒரு சோதனையா..? புலம்பும் ரசிகர்கள்.!

Summary:

Bumrah not taken single wicket in 3 odi

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான 5 T20 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் T20 கோப்பையை கைப்பற்றியது. இதனை அடுத்து நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

காயம் காரணமாக ரோஹித் சர்மா விளையாடாமல் போனது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மோசமாக விளையாடியது மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.

மூன்று போட்டிகளிலும் சேர்த்து 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் விராட்கோலி. அதேபோல, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், உலக அளவில் நம்பர் ஒன் பந்து வீச்சாளருமான பும்ரா, கடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 30 ஓவர்கள் வீசியுள்ள பும்ரா, மொத்தம் 167 ரன்கள் கொடுத்துள்ள நிலையில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. நம்பர் ஒன் பவுலருக்கே இந்த நிலையா என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement