விளையாட்டு

டியர் பிராவோ! நீங்களே இப்படி செய்யலாமா? செம கடுப்பில் இருக்கும் சென்னை ரசிகர்கள்!

Summary:

Bravo gave 29 runs in last over

ஐபிஎல் போட்டியின் 12வது சீசன் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் சிஎஸ்கே, பஞ்சாப், சன்ரைசர்ஸ், கேகேஆர் ஆகிய நான்கு அணிகளும் சிறப்பாக ஆடி  புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளன. கடந்த சீசனில் சொதப்பிய மும்பை அணி இந்த முறை அந்த தவறை செய்யாது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் மும்பை இடையிலான போட்டி இன்று மும்பையில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

ஆரம்பத்தில் இருந்து சுதப்பிய மும்பை அணி ஆட்டத்தின் இறுதி ஓவர் வரை தடுமாறியது. 19 ஓவர்களில் 141 ஓட்டங்கள் மட்டுமே  எடுத்தது. ஆட்டத்தின் இறுதி ஓவரை வீச பிராவோ வந்த நிலையில் மும்பை அணியின் பாண்டியா ஆடிய ருத்ர தாண்டவத்தில் கடைசி ஓவரில் மட்டும் மும்பை அணி 29 ஓட்டங்கள் பெற்றது. இதன் மூலம் சென்னை அணிக்கு 171 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணி எளிதாக வெற்றிபெற வேண்டிய இலக்கை பிராவோ வீசிய கடைசி ஓவர் புரட்டி போட்டுவிட்டது என்றே கூறலாம். ப்ராவோவின் மோசமான இந்த ஆட்டத்தால்  சென்னை ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.


Advertisement