விளையாட்டு

தோனிக்கு ஸ்பான்ஸர் செய்ய 6 மாதங்கள் யோசித்த பிஏஎஸ் நிறுவன தலைவர்.. சுவாரஸ்ய தகவல்!

Summary:

Bas owner shares about dhoni experience

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பலரும் தோனியுடனான தங்கள் அனுபவத்தினை பகிர்ந்து வருகின்றனர்.

அதன்படி தோனிக்கு கிரிக்கெட் உபகரணங்கள் ஸ்பான்ஸர் செய்த பிஏஎஸ் நிறுவனத்தின் தலைவர் சோமி கோலி, "ராஞ்சியை சேர்ந்த டீலரான பரம்ஜித் சிங் என்பவர் 1997 ஆம் ஆண்டு தோனியை பற்றி கூறி அவருக்கு கிரிக்கெட் உபகரணங்களை இலவசமாக ஸ்பான்ஸர் செய்யுமாறு கேட்டார்.

கிட்டத்தட்ட 6 மாத கால யோசனைக்கு பிறகு 2008 ஆம் ஆண்டில் தோனிக்கு ஸ்பான்ஸர் செய்ய துவங்கினோம். எங்களுக்குள் இந்த தொடர்பு 22 ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

தோனியின் ஓய்வு பற்றிய செய்தி கேட்டதும் என்னால் தூங்க முடியவில்லை. அருமையான வீரரான தோனியின் பயணத்தில் நாங்களும் உடனிருந்தோம் என்பது மகிழ்ச்சியாய் உள்ளது" என அவர் கூறியுள்ளார்.


Advertisement