விளையாட்டு

நேற்றைய போட்டியில் நடந்த திடீர் சம்பவம்! பதறிப்போன தோணி ரசிகர்கள்!

Summary:

Ball hits dhoni head at 143 kilo meter speed rr vs csk

ராஜஸ்தான், சென்னை அணிகள் இடையே ராஜஸ்தானில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் மட்டுமே எடுத்தது. 152 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் டோனி, ராய்டு இருவரும் கூட்டணி சேர்ந்து சென்னை அணியை வெற்றிபெற செய்தனர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் பவுலர் வீசிய பந்து தோனியின் தலையில் பயங்கர வேகமாக அடித்தது தோணி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

16 . 4 வது ஓவரை ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசினார். 143 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட பந்தை தோணி எதிர்கொண்டார். சற்றும் எதிர்பாராமல் ஆர்ச்சர் வீசிய பந்து தோனியின் முன் தலையில் பயங்கர வேகமாக மோதியது.

143 கிலோமிட்டர் வேகத்தில் பந்து தன் தலையில் பட்டும் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாமல் தோணி ரன் ஓடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து விளையாடிய தோணி சில ஓவர்களில் மூச்சிரைத்து கீழே படுத்துவிட்டார். இந்த சம்பவம் தோணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement