விளையாட்டு

மனுஷன் அடுச்ச அடி அப்படி!! சிக்ஸர் லைனில் சுக்குநூறாய் உடைந்து கொட்டிய கண்ணாடி.. வைரல் வீடியோ..

Summary:

ஹைதராபாத் அணி வீரர் பாரிஸ்டோவ் அடித்த சிக்ஸரில் மைதானத்தில் இருந்த கண்ணாடி சுக்குநூறாக உடை

ஹைதராபாத் அணி வீரர் பாரிஸ்டோவ் அடித்த சிக்ஸரில் மைதானத்தில் இருந்த கண்ணாடி சுக்குநூறாக உடைந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகிவருகிறது.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 11 போட்டிகள் நடந்துமுடிந்துள்ள நிலையில் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்று நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தால் வெற்றிபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 150 ரன்களை கைப்பற்றியது. அதிகபட்சமாக டீகாக் 40 மற்றும் ரோதித் சர்மா 32 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கத்தில் அதிரடியாக விளையாட தொடங்கினர். தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ 43 ரன்கள் மற்றும் டேவிட் வார்னர் 36 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார்கள்.

அதன்பிறகு ஹைதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து 19.4 ஓவரில் 10 விக்கெட்களையும் இழந்து ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மூன்றாவது ஓவரில் ஹைதராபாத் வீரர் பேர்ஸ்டோ அடித்த சிக்ஸர் பவுண்டரி லைனிற்கு வெளியே வைத்திருந்த ஃபிரிட்ஜில் பந்து பட்டு கண்ணாடி சுக்குநூறாய் நொறுங்கியது. பந்து கண்ணாடியில் பட்டு கண்ணாடி நொறுங்கியதும் அங்கு அமர்ந்திருந்த ஹைதராபாத் அமர்ந்திருந்த ஹைதராபாத் அணி வீரர்கள் பயந்து போய் ஓடிய வீடியோ சமூக வலைதளங்கிளில் வைரலாகி வருகிறது.


Advertisement