வெற்றிப் பாதைக்கு சென்ற பாகிஸ்தான்.! கடைசி நேரத்தில் தரமான ஹாட்ரிக் சிக்ஸர்.! மொத்தமாக மாறிய ஆட்டம்.! கண்ணீர் விட்ட ரசிகர்கள்

வெற்றிப் பாதைக்கு சென்ற பாகிஸ்தான்.! கடைசி நேரத்தில் தரமான ஹாட்ரிக் சிக்ஸர்.! மொத்தமாக மாறிய ஆட்டம்.! கண்ணீர் விட்ட ரசிகர்கள்


australia-won-semifinal

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின்  முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் ஆடப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

அதில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் பங்கேற்றது. துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய பாபர் ஆசம் 39 ரன்கள் எடுத்தநிலையில்  ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் 67 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார்.  இதனையடுத்து களமிறங்கிய பகர் சமன் சிறப்பாக ஆடி 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 177 ரன்கள் எடுத்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறமுடியும்  என்ற சற்று கடினமான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் 49  ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஓரளவுக்கு நிதானமாக ஆடிய ஆஸ்திரேலிய அணியினர் அவுட்டாகிய நிலையில், அடுத்ததாக களமிறங்கிய  மேத்யூ வேட் மொத்த ஆட்டத்தையும் தலைகீழாக மாற்றினார்.

கடைசி 10 பந்துகளுக்கு 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபொழுது. மேத்யூ வேட் 19ஆவது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்க விட்டு அணியை வெற்றி பெறச் செய்தார். ஆஸ்திரேலியா அணி 19 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  இதனை அடுத்து வரும் 14-ஆம் தேதி நடக்கும்
இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன், ஆஸ்திரேலியா அணி மோத உள்ளது.