ஒற்றை வீரர் இல்லாததால் இந்திய அணியில் ஏற்படும் மிகப்பெரிய வெற்றிடம்.! ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஓப்பன் டாக்.!

ஒற்றை வீரர் இல்லாததால் இந்திய அணியில் ஏற்படும் மிகப்பெரிய வெற்றிடம்.! ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஓப்பன் டாக்.!


australia former captain

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி முடிந்தவுடன் விராட் கோலி, தனது மனைவியின் பிரசவத்திற்காக தாயகம் திரும்புவார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் விராட் கோலி தாயகம் திரும்பும்போது, அது நிச்சயம் அணியில் வெற்றிடத்தை உருவாக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.

விராட் கோலி குழந்தை பிறப்புக்காக இந்தியா திரும்பும் போது வீரர்களின் தேர்வில் இந்திய அணி நிர்வாகம் தர்மசங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். விராட் கோலி இல்லாத போது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கும். அதே சமயம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையான இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை நிரூபிக்க இது அருமையான வாய்ப்பாகும்.

indian team

இந்த தொடர் ஏற்கனவே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது. இதில் இப்போது கூடுதலாக வீரர்கள் தேர்வு முக்கிய பங்காற்றப்போகிறது. யார் துணிச்சலான தேர்வாளர்கள் என்பது, அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்த பிறகு தான் தெரியும்.