விளையாட்டு

ஒரே ஓவரில் பஞ்சாபின் கதையை முடித்த அஸ்வின் மீண்டும் விளையாடுவாரா?

Summary:

Aswin next matchil veliyaduvathu kastam

நேற்று முன்தினம் 13 வது ஐபிஎல் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக தொடங்கியது. முதல் நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி வாய்ப்பை தட்டி சென்றது.

அதனை தொடர்ந்து நேற்று பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதின. அதில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய சூழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதாவது அஸ்வின் வீசிய முதல் ஓவரில் 2 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டை கைப்பற்றினார்.

ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தை தடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனையடுத்து அவர் பாதியிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் அஸ்வின் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது. 


Advertisement