ஆசியா கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்த புள்ளிவிவரங்களில் பட்டியல்...!



asia-cup-2018-india-vs-pakistan

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் நேற்றைய போட்டியில் 2 ரன் மட்டுமே எடுத்தார் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

புவனேஷ்வர் குமார் நேற்று தொடக்க வீரர்கள் இருவரையுமே வெளியேற்றினர். இதுவரை அவர் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் எட்டு முறை இதுபோன்று வெளியேற்றியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பஹர்ர் ஜமான் ட்க் அவுட் ஆனார் இதுவே அவரது முதல் டக்...

பாகிஸ்தான் அணி நேற்று அளித்த 162 ரன்கள் அந்த அணி துபாயில் அடித்த மிகக் குறைந்த ரன்..

பந்துகளின் அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றியாகும்

ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக பரம வைரிகளான இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் ஆட்டம் புதன்கிழமை மாலை துபையில் நடைபெற்றது. பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றிருந்தது.

அதே நேரத்தில் இந்தியா போராடி தான் ஹாங்காங் அணியை வெல்ல முடிந்தது. இந்நிலையில் குழுவில் முதலிடம் பெறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான ஆட்டம் இந்திய-பாக். அணிகள் இடையில் நடைபெற்றது. இரு நாடுகள் இடையிலான ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அனல் பறக்கும் என்பதால் அரங்கம் முழுமையாக நிரம்பி இருந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்கமே அதிர்ச்சி: அந்த அணியின் இமாம் உல் ஹக், பாக்கர் ஸமான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் தொடக்கமே அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.
சுழலில் சுருண்ட பாக்.: இறுதியில் பாகிஸ்தான் அணி ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா அபார வெற்றி:

முதலி கேப்டன் ரோஹித் தனது பணியை திறம்பட செய்து அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் செய்தார். தவான் அவர் பங்கிற்கு நாற்பத்தாறு ரன்கள் எடுத்தார். அதன் பிறகு அம்பதி ராயுடு-தினேஷ் கார்த்திக் இணை சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ராயுடு , தினேஷ் கார்த்திக் இருவரும் தலா 31 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பழிதீர்த்தது இந்தியா: கடந்த 2017-இல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோற்றதற்கு தற்போது பாகிஸ்தானை பழிதீர்த்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.