இந்தியா பாக்கிஸ்தான் விரைவில் மோதல்.. வெல்வது யார்? அனைவரும் எதிர்பார்ப்பு

இந்தியா பாக்கிஸ்தான் விரைவில் மோதல்.. வெல்வது யார்? அனைவரும் எதிர்பார்ப்பு



asia-cup-2018-cricket

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று இரவு வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், அபிஹக்கானிஸ்தான் என மொத்தம் 5 அணிகள் நேரடியாக விளையாடுகின்றன. மீதமுள்ள ஒரு அணி தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்  இதில் ஏ பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பிடித்துள்ளன.

Asia cup 2018

முதல் போட்டி செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. இதில் இலங்கையும் வங்காளதேசமும் மோதுகின்றன. இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் செப்டம்பர் 19-ம் தேதி மோதுகிறது.   

இரு பிரிவிலும் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அவற்றில் இருந்து இரு அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும். இறுதி போட்டி செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.