
Ashwin's daughters condition ahead of ipl
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி அஸ்வின் பின்னர் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்தார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அஸ்வின் டெல்லி கேப்பிடஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதனால் அவர் சென்னையில் உள்ள தனது வீட்டிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
நேற்று முன் தினம் வீட்டிலிருந்து புறப்பட்ட அஸ்வினுக்கு அவரது மகள்கள் சில கண்டிஷன்களை போட்டு வழியனுப்பி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த கண்டிஷன்களை அவரது மகள்கள் அவருக்கு போட்டுள்ளனர்.
அஸ்வினின் மனைவி ட்விட்டரில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அஸ்வினின் மகள்கள் அவரிடம், "யாரையும் கட்டிப்பிடக்க கூடாது, யாருக்கும் முத்தம் கொடுக்க கூடாது, எதையும் தொட கூடாது" என கண்டிஷன் போடுகின்றனர். மகள்களின் கண்டிஷனை கேட்டுக்கொண்ட அஸ்வின் வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டார்.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 20, 2020
Advertisement
Advertisement