விளையாட்டு

"அவர் இல்லாமல் எப்படி சமாளிக்க போகிறேன்" புலம்பும் அஸ்வினின் மனைவி.. காரணம் என்ன தெரியுமா?

Summary:

Ashwin wife worries about daughters online classes

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் செப்டம்பர் 19 ஆம் தேதி யூஏஇயில் துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

இதற்காக அஸ்வின் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். கொரோனா பரவல் காரணமாக இத்தனை நாட்கள் வீட்டிலேயே இருந்த அஸ்வின் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளியில் செல்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஸ்வினின் மனைவி பிரீத்தி அஸ்வின், "அவர் வீட்டில் இல்லாமல் போவது எனக்கு மிகப்பெரிய சிரமமாக இருக்க போகிறது. காரணம் தன் மகள்களுடன் இனிமேல் ஆண்லைன் வகுப்புகளில் நான் தான் உட்கார வேண்டும்" என புலம்பியுள்ளார்.

அஸ்வின் - ப்ரீத்தி தம்பதியருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆண்லைனில் பாடம் எடுத்து வருவதால் அஸ்வினின் மகள்களும் ஆண்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர்.


Advertisement