தமிழகம் விளையாட்டு

பொறுப்பில்லாத தமிழக இளைஞர்கள்; கடுப்பான அஸ்வின் அதிரடி ட்வீட்!

Summary:

Ashwin

சமீபகாலமாக ட்விட்டரில் தமிழக இளைஞர்கள் தங்களுக்கு பிடித்தமான திரை பிரபலங்களை ஆதரித்து பேசுவதும், பிடிக்காதவர்களை தரக்குறைவாக பேசியும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 

ஒன்றுக்குமே உதவாத பல விசயங்களை இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆக்கி விடுகின்றனர். இதனால் பல முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிய சிந்தனையும், எண்ணங்களும் அவர்களுக்குள் எழுவதில்லை. 

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் வெறும் சினிமா பிரபலங்களை பற்றி மட்டுமே பேசி நேரத்தை வீணாக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாகி வருகிறது. தமிழக இளைஞர்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவிடாமல் இதைப் போன்ற சிறிய விசயங்களிலே கவனத்தை வைத்திருக்க வேண்டும் என்று பின்னால் இருந்து சிலர் வேலை செய்வது போன்றும் சில சமயம் எண்ணத் தோன்றுகிறது. 

இந்நிலையில் இன்று ட்விட்டரில் நடிகர் விஜய்யை பற்றி இழிவாக பலர் ட்விட்டரில் பதிவிட '#RIPactorVIJAY' என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. தமிழக இளைஞர்களின் இந்த தேவையற்ற வேலையை நினைத்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் மிகவும் கவலையடைந்துள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், "சிறிய நாட்களுக்கு முன்பு நமது பூமியை சிறிய கல் ஒன்று தாக்கியது. மேலும் அதுமட்டுமின்றி பருவநிலையில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டன. பல்வேறு இடங்களில் வறட்சி நிலவியது. ஆனால் இதையெல்லாம் விடுத்து நமது இளம் தலைமுறையினர் இப்படி செய்வது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


Advertisement