
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சென்னை ஆடுகளத்தை &lsqu
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சென்னை ஆடுகளத்தை ‘நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான சர்பேஸ்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபரா வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் சென்னை ஆடுகளம் குறித்து ஆர்ச்சர் கூறுகையில், ‘நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான சர்பேஸ்’ எனத் சென்னை மைதனைத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆடுகளத்தில் கரடுமுரடான திட்டுகள் இருந்தன, அவை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெருமளவில் உதவின, அதே நேரத்தில் கடந்த இரண்டு நாட்களில் அதிலிருந்து தூசி கூட வெளியே வரத் தொடங்கியது. இதனால் தான் ஆர்ச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement