
Aniruth post video for dhoni birthday
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. இவர் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனுமாவார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி தனது கூலான ஆட்டத்தால் ஏராளமான வெற்றிகளை தன்வசமாகியுள்ளார். மேலும் இவருக்கென உலகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் தோனி இன்று தனது 39வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தோனியின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் #HappyBirthdayDhoni என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து கூறும் வகையில் மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement