விளையாட்டு

விளையாடுவதற்கு முன் தனது பேட்டை வாயால் கடித்த தோனி! ஏன்? உண்மையை உடைத்த முன்னாள் வீரர்!!

Summary:

விளையாடுவதற்கு பின் பேட்டை வாயால் கடித்த தோனி! ஏன்? உண்மையை உடைத்த முன்னாள் வீரர்!!

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையே போட்டி நிலவியது. அதில் சிஎஸ்கே அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு முன் தனது பேட்டை பல்லால் கடித்துக் கொண்டு இருந்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தப் போட்டியில் மட்டுமின்றி இதற்கு முன்பு நடந்த பல போட்டிகளிலும் தோனி அவ்வாறு பேட்டை கடித்துள்ளார். இந்த நிலையில் தோனி ஏன் அவ்வாறு செய்கிறார் என ரசிகர்களிடையே கேள்வி எழும்ப துவங்கியது.

அதனை தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளித்து முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், தோனி ஏன் தனது பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அவர் பேட்டில் உள்ள டேப்கள், நூல்கள் ஆகியவற்றை வாயால் கடித்து அகற்றி விடுவார். அவருக்கு அவருடைய பேட் எப்பொழுதும் மிக சுத்தமாக இருக்க வேண்டும். அவரது பேட்டிலிருந்து  சிறிது கூட நூல் அல்லது டேப்பை வெளிவந்திருப்பதை உங்களால் பார்க்க முடியாது என கூறியுள்ளார்.


Advertisement