விளையாட்டு

உலகக்கோப்பை அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்! வீரர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சி!

Summary:

Afghanistan cricket team captain changed before world cup 2019

ஐபில் போட்டி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் நிலையில் இந்த மாதம் இறுதியில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகிறது. உலக கோப்பை போட்டியில் விளையாடும் அணைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஆஸ்கர் அஸ்கர் ஆஃப்கான் தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். இவரது தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு வெற்றிகளையும், கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது. சிறப்பாக ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய அஸ்கர் ஆஃப்கான் உலக கோப்பை போட்டிக்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து தூக்க பட்டு அவருக்கு பதில் குல்பாதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றம் குறித்து அணி வீரர்கள் உட்பட அனைவரும் அதிருப்தி அடைந்த நிலையில் இது குறித்து விலக்களித்துள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர். அதாவது இந்த உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் ஆனால் நிச்சயம் வெல்ல முடியாது.

எனவே அடுத்த உலக கோப்பைக்கு நாங்கள் இப்போதே தயாராகி வருகிறோம். அடுத்த உலக கோப்பை போட்டிக்கு நிச்சயம் நைப் தான் கேப்டன். சர்வேதேச அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே உலக கோப்பை வாய்ப்பை பயன்படுத்தி சர்வேத அணிகளின் நிலை, ஆப்கான் வீரர்களின் நிலையை நைப் புரிந்துகொள்ளவே கேப்டன் மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


Advertisement