விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளருக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர்.. மேலும் வலுப்பெறும் ஆர்சிபி அணி!

Summary:

Adam zamba joins in rcb replacing kane richardson

செப்டம்பர் 19 ஆம் தேதி யூஏஇயில் துவங்கவுள்ள ஐபிஎல் 2020 தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் புதிய வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சம்பா இணைகிறார்.

ஏற்கனவே அர்சிபி அணியில் தேர்வாகியிருந்த வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் தனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கியுள்ளதால் இந்த தொடரில் இருந்து முற்றிலுமாக விலகிவிட்டார். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சம்பாவை ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது.

டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ஆடம் சம்பா. இவர் ஆர்சிபி அணியில் இணைவது அந்த அணிக்கு சுழற்பந்து வீச்சில் மேலும் வலு சேர்க்கிறது.

ஆர்சிபி அணியில் ஏற்கனவே பிரபல சுழற்பந்து வீச்சாளர்கள் சாகல், வாஷிங்கடன் சுந்தர், மொயின் அலி ஆகியோர் உள்ளனர். தற்போது ஆடம் சம்பாவின் வரவால் ஆர்சிபி அணி சென்னை அணிக்கு அடுத்தபடியாக சுழற்பந்து வீச்சில் வலிமையான அணியாக உள்ளது.


Advertisement